ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
இது நான் மிகவும் விரும்பி சிந்திக்கும் இராமலிங்க சுவாமிகள் பாடல்களில் ஒன்று. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி பணம் தேட கற்பிக்கும் கலாசாலைகளே உள்ள இந்தக்காலத்துக்கு இப் பாடல் சற்றும் பொருத்தமற்றதுதான். சென்ற வாரம் இக்கால Business/Management/Marketing பற்றியும், இவற்றோடு முரண் படும் இடதுசாரி கருத்துக்கள் பற்றியும், இவற்றால் ஏழை செல்வந்த ஏற்றத்தாழ்வு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிகரிப்பது பற்றியும் சிறிது எழுதியிருந்தேன். எழுத ஆரம்பித்த பின் தான் தெரிந்தது இதுபற்றி எழுத எனக்கு அறிவும் அனுபவமும் போதாது என்று. இம்முயற்சியின் போதே இப்பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.
No comments:
Post a Comment